ரசிகர்களுக்கு பரிசளிக்கும் சிஎஸ்கே

 
சிஎஸ்கே

இணையதளத்தில் பெயரை உள்ளீடு செய்தால் அனைத்து சிஎஸ்கே அணி வீரர்களும் கையெழுத்திட்ட நன்றி அட்டையை பெயருடன் அனுப்பும் வகையில் சென்னை ஐபிஎல் கிரிக்கெட் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.  முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை மொத்தம் 65 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 13 லீக் போட்டிகளில் பங்கேற்று சென்னை 7ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மே 18 நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணியில் மீண்டும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

Csk

ஒரு பக்கம் பலம் வாய்ந்த சென்னை அணியும் மறுபுறம் தொடர்ந்து ஐந்து போட்டிகளை வென்றுள்ள பெங்களூரு அணியும் மோத உள்ளதால் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக போட்டி நடைபெற உள்ள பெங்களூரில் தொடர் மழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில், ரசிகர்கள் தங்களது பெயர்களை பதிவிட்டால் அப்பெயரைக் குறிப்பிட்டு சிஎஸ்கே அணி வீரர்களின் புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய நன்றி தெரிவிக்கும் அட்டையை சிஎஸ்கே நிர்வாகம் பரிசளிக்கிறது.