சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே!

 
csk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை அணியின் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது

TATA ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான போட்டி அட்டவனையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.  முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2ம் கட்ட அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்தாண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.