தோனி அபார ஆட்டம் - லக்னோவை வீழ்த்தியது சென்னை!

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  லக்னோவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ல்க்னோ அணி தொடக்கம் முதலே தடுமாறியது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் முடிவில் 166 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 5 போட்டிகளுக்கு பின்னர் சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.