50 ஓவர் உலக கோப்பையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்தியா வெல்லும் என நம்பிக்கை!

 
mk stalin

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவருமான டாக்டர் அசோக் சிகாமணி 50 ஓவர் உலக கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

13-வது 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவருமான டாக்டர் அசோக் சிகாமணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர்  சீனிவாச ராஜ் ஆகியோர் சந்தித்து,  இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (ICC Men's Cricket World Cup India 2023) கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உலக கோப்பையை இந்தியா வெல்லும்  என குறிப்பிட்டுள்ளார்.