#BREAKING இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
அஜித் அகர்கர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்றதை அடுத்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை தலைமை தேர்வாளராக பிசிசிஐ உறுதி செய்தது.
அகர்கர் இருந்த காலத்தில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பை, 2 ஆசியக் கோப்பை வென்று சாதித்தது. அதேசமயம், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ரமேஷ் பவார் இந்தக் குழுவில் இணைந்துள்ளார். பிரக்யான் ஓஜா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததற்கான பர்ப்பிள் கேப் விருதையும் வென்றுள்ளார். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராகப் பிரக்யான் ஓஜா பொறுப்பேற்றுள்ளார். அஜித் அகர்கர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ரமேஷ் பவார் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 31 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்பிறகு அவர் பயிற்சியாளர் பணிக்கு மாறி, இந்திய மகளிர் அணி, மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்குத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். பிசிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். மகளிர் அணியுடன் அவர் இருந்த காலத்தில், இந்தியா ஆசியக் கோப்பையையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

