உலக கோப்பை மீது கால் வைத்து அடாவடி... மிட்செல் மார்ஷை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

 
marsh

ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது தனது இரண்டு கால்களையும் வைத்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.  இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது. டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஸேன் ஜோடி அந்த அணியை வெற்றி பெற செய்தது. 43 ஓவர்களில் அந்த அணி 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக அந்த அணி உலக கோப்பையை வென்றது.

aus

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது தனது இரண்டு கால்களையும் வைத்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிட்செல் மார்ஷ் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் எனவும், அவருக்கு இவ்வளவு கர்வம் இருக்க கூடாது எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.