கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி

 
modi stadium

உலக கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன், அகமதாபாத் மைதானத்திற்கு மேலே இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

indvsaus

இந்த நிலையில், உலக கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன், அகமதாபாத் மைதானத்திற்கு மேலே இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே இறுதிப் போட்டியின் போது விமானப் படை சார்பில் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.