கபில் தேவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு - புகைப்படங்கள் வைரல்!

 
Rajini and Kapil dev

நடிகர் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பிற்காக ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். கபில் தேவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.