பேட்ஸ்மேன்கள் சொதப்பல் - 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி

 
ind vs wi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  
 
மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதனிடையே, முதல் டி20 போட்டி கடந்த 29ம் தேதி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

WI

இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு  வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் இறுதி வரை சொதப்பியது. இந்திய அணி19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹர்த்திக் பாண்டியா 31 ரன்கள் சேர்த்தார். 

இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது