டி20 தரவரிசை பட்டியல் - 2வது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

 
Virat

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில்  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டார்.  தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர்.  கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சுமார் 1020 நாட்களுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.  61 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

virat

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே சொதப்பியது. 6.5 ஓவர்களிலேயே அந்த அணி 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களுக்கு 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

இந்நிலையில்,  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்றைய போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி இதுவரை 96 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 32 அரைசதம் உள்பட 3,584 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ரோகித் சர்மா (3,620), மூன்றாவது இடத்தில் கப்தில் (3,497) ஆகியோர் உள்ளனர்.