கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற விராட் கோலி முடிவு ?

 
virat

மோசமான பேட்டிங் ஃபார்மால் அவதிப்பட்டு வரும் விராட் கோலி, சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். மோசமான ஃபார்ம் காரணமாக அவரால் ரன் குவிக்க இயலவில்லை. இதன் காரணமாக அவர் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விராட் கோலியை டி20 போட்டியில் இருந்து நீக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு காரணம் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கே காரணம். இவ்வாறு தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி நவம்பர் 23, 2019 கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த  பிங்க் பால் டெஸ்டில் அவர் 136 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் ஒருசதம் கூட அடிக்கவில்லை. இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க தவறினால் அவர் 1000 நாட்கள் சதம் அடிக்காமல் இருந்தார் என்ற மைல்கல்லை எட்டுவார்.

virat out

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த 5வது டெஸ்டில் விராட் கோலி இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சொதப்பினார். முதல் போட்டியில் விளையாடாத நிலையில், இரண்டாவது போட்டியில் ஒரு ரன்களும், மூன்றாவது போட்டியில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது ஒருநாள் தொடரிலும் சொதப்பி வருகிறார் விராட் கோலி. நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதன் காரணமாக இந்திய அணி அடுத்ததாக விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில், விளையாட உள்ளது. இந்நிலையில் விராட் கோலி இன்றைய போட்டிக்கு பின்னர் ஆசிய கோப்பை கிரிக்கெட் முடியும் வரை கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.