ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் - விராட் கோலி முன்னேற்றம்

 
virat

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்து அசத்திய கோலி 113 ரன்னில் அவுட்டானார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களுக்கு  இழப்புக்கு 373 ரன்கள் குவித்ததோடு, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி 2 இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் 83 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.