டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 23ம் தேதி தொடக்கம்

 
TNPL

6-வது சீசன் டிஎன்பிஎல் டி20  கிரிக்கெட் தொடர் நெல்லையில் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் 6-வது சீசன் டி.என்.பி.எல். தொடர் வரும் ஜூன் 23-ம் முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் 6வது சீசன் டிஎன்பிஎல் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டி நடைபெறவுள்ளது. 

TNPL


சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. பிளேஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கின்றன. இறுதிப் போட்டி ஜூலை 31ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. 23ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், 

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. ஆட்டங்கள் தினமும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் எனவும், விடுமுறை நாட்களில் மற்றொரு போட்டி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.