15 ஆண்டுகளில் ‘தல’ தோனி இல்லாமல் முதல் நாக் அவுட் போட்டி

 
dhoni

கடந்த 15 வருடங்களில் தோனி இல்லாமல் நடைபெறும் முதல் நாக் அவுட் போட்டியில் இந்திய அணி. நாளை அரைஇறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Image

இந்திய கிரிக்கெட் அணி நாளை டி20 உலககோப்பை அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது அசத்தியுள்ளது. மொத்தமாக 5 போட்டியில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் கடந்த 15 வருடங்களில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இல்லாமல் நாக் அவுட் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். 2007 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் தோனி பங்கேற்றார். கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தோனி இல்லாமல் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்