இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? - இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்

 
ind eng

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

IND

இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.