ஐசிசி தரவரிசை பட்டியல் - சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

 
suryakumar

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்து விலங்கும், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் 816 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் (76) அரைசதம் அடித்ததன் மூலம் சூர்ய குமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. 

suryakumar

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 653 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.டெஸ்ட் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.   ரிஷாப் பந்த் 801 புள்ளிட்களுடன் 5வது இடத்தில் நீடிக்கிறார்.பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 828 புள்ளிகளுடன் 3வது இடத்தை பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிதியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அஷ்வின் 2வது இடத்தில் தொடர்கிறார்.