டி20 தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடம் - மாஸ் காட்டும் சூர்யகுமார் யாதவ்

 
suryakumar

டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்காற்றினார். முதல் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 கிரிக்கெட்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Suryakumar Yadav having no limit in T20I

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 908 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறார். 20 ஓவர் பேட்ஸ்மேன் வரிசையில் டாப்-10 இடத்திற்குள் உள்ள ஒரே இந்தியர் அவர் தான். தொடர்ச்சியாக டி20 தொடர்களில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதேபோல் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார்.