காமன்வெல்த் - பாரா பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் சுதிர்

 
sudhir

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றதை அடுத்து இந்தியாவிற்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்தது. 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் 7வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றார். பாரா பளுதூக்குதல் போட்டியில் 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட முன்னணியில் இருந்தார் சுதிர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.. தங்கப்பதக்கம் வென்றுள்ள சுதிர் ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடதக்கது.