இங்கிலாந்துக்கு எதிரான போட்டி - இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

 
SRI vs IRE

டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் சூப்பர் 12 போட்டியில் குரூப்1 பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என  5 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும். அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக இலங்கை அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி பந்துவீசுகிறது.