டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

 
Srilanka

டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

7-வது டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

sri

 

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி உலகக்கோப்பை பிரதான சுற்றுக்கு வரும் முன் தகுதிச்சுற்று அணிகளுடன் மோதிதான் சூப்பர் 12 சுற்றுக்குள் தகுதி பெற முடியும். இந்நிலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனகா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 இலங்கை அணி:தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோஉள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.