சகீப் அல் ஹசனின் அவுட் நாட் அவுட்டா? சர்ச்சைக்குள்ளான 3வது நடுவரின் முடிவு

 
out drs

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகீப் அல்ஹசனுக்கு வழங்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியாவும் தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது. 

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அந்த அணி இறுதியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சாண்டோ 54 ரன்கள் சேர்த்தார். 

pak

இந்நிலையில், வங்கதேச அணியின் கேப்டன் ஷகீப் அல்ஹசனுக்கு வழங்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷதாப் கான் வீசிய பந்தை எதிர்க்கொண்ட ஷகீப் முதல் பந்தை எதிர்க்கொண்ட நிலையில் அதில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். ஷகீப்பிற்கு எதிராக ஷதாப் கான் நடுவரிடம் எல்.பி.டபுள்யூ அவுட் கேட்க அவர் அவுட் கொடுத்தார். இதையடுத்து, நடுவரின் முடிவுக்கு எதிராக ஷகீப் ரிவ்யூ எடுத்தார். ரிவ்யூவில் ஷகீப் பேட்டில் பந்து படுவது போன்று காட்சிகள் தெரிந்தது. ரிவ்யூ செய்தபோது ஷகீப்பின் பேட்டிற்கும் தரைக்கும் சிறிது இடைவெளி இருப்பதும், பந்தின் மீது பேட் உரசுவதற்கான காட்சிகளும் தெளிவாக தெரிந்தது. ஆனாலும், 3-ம் நடுவர் ஷகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுத்தார். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ரிவ்யூவிலும் அவுட் கொடுத்ததால் ஷகீப் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். ஷகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.