டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

 
sanju samson

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் புதிதாக  சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ind vs eng

இந்நிலையில், மீதமுள்ள 4 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் டி20 தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடாரை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.