காமன்வெல்த் தொடர்- இந்தியாவிற்கு முதல் தங்கம்

 
 Mirabai Chanu

காமன்வெல்த் தொடரின் பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

Medal

உலக நாடுகள் எதிர்பார்க்கும் காமன்வெல்த் விளையாட்டு தொடரானது இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த வியாழக்கிழமை கோலாகல தொடங்கி நடைபெற்றுவருகிறாது. பல்வேறு வகை விளையாட்டுகளில் இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் களம் காண்கின்றனர். காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி அணியை நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து வழிநடத்தினார்.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் 61 கிலோ எடை பிரிவில் இந்தியாவிம் குருராஜா வெண்கலம் வென்றார். காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் காமன்வெல்த் தொடரின் பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.