இன்றைய போட்டியில் ரிஷ்ப் பந்தா, தினேஷ் கார்த்திக்கா? - ரோகித் சர்மா விளக்கம்

 
dk and rishap

இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  

rohit


  
இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். முதல் 4 ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட இறங்கினார். அரைஇறுதியில் யாருக்கு வாய்ப்பு என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறியதாவது:  'ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திற்கு முன்பாக நாங்கள் அரைஇறுதியில் யாருடன் மோதப்போகிறோம் என்பது தெரியாமல் இருந்தது. அதனால் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்குவதற்கு ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால் நாளைய இன்றைய ஆட்டத்தில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.