ரோகித் சர்மாவை பார்க்க வந்த ரசிகருக்கு ரூ.7.50 லட்சம் அபராதம்

 
RohitSharma

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது சூப்பர் 12  ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில்  இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா குரூப் 2 பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க உதவியது. வரும் வியாழன் (நவம்பர் 10) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் நடுவே ஒரு இந்திய ரசிகர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்திற்குள் தேசிய கொடியுடன் நுழைந்தார். அந்த ரசிகர் ரோஹித் சர்மா விடம் கண்ணீருடன் பேசினார், ஆனால் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதால் அவருடன் நீண்ட நேரம் பேச முடியவில்லை.

இந்நிலையில் அவர் எம்.சி.ஜி மைதான விதிமுறையை மீறியதால் இந்திய மதிப்பில் ரூ.7.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.