பெங்களூருவிடம் தோல்வி - ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை

 
IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49வது லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

IPL

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் பாப் டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.கேப்டன் பாப் டு பிளசிஸ் 38 ரன்களிலும்,விராட் கோலி 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த லோம்ரார் 42 ரன்களும்,தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

174 என்ற இலக்கை துரத்திய சென்னை அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.அடுத்துவந்த உத்தப்பா,ராயுடு மற்றும் ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
சிறப்பாக ஆடிய கான்வே 56 சேர்த்து சென்னை அணியயை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.ஆனால் நடுவரிசையில் சிறப்பாக ஆடி வந்த மொயின் அலி 34 ரன்களில் ஆட்டமிழந்த உடன் ஆட்டம் பெங்களூர் ரணியின் பக்கம் சென்றது.20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன் மூலம் பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குறிப்பிட்ட இடத்திற்கு முன்னேறியது. தோல்வியடைந்த சென்னை அணி ஏறத்தாழ இந்த தொடரில் இருந்து வெளியேறியது.