தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு

 
ponmudi and son

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்திய சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா இருந்து வந்தார். இவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நெடுங்காலமாக தேர்தல் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி மற்றும் பிரபு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்நிலையில், இன்று காலை பிரபு தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இதன் காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாசராவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சிகாமணி இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.