அதிரடி ஆட்டம்! நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

 
pak

டி20 உலக கோப்பை தொடரின், முதலாவது அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின.  இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

NZ

இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலென் 4 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வேவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.  அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார். மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.  இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 153 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தான் அணியுடன் 13ம் தேதி இறுதி போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.