டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

 
Pakistan

டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

7-வது டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. 

Pakistan

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் துணை கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார். 

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.