சரவெடியாய் வெடித்த சதாப் கான் - தென் ஆப்ரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு

 
rsa vs pak

டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 185 ரன்கள் சேர்த்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.  சிட்னியில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இந்த தொடரில் இரண்டு வெற்றி, ஒரு முடிவில்லை என  5 புள்ளிகளுடன் உள்ள  தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்றாலும் கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதுமானது. பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி,  2 தோல்வி என  2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். இது போன்று நடந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரைஇறுதி கதவு திறக்கும். 

RSA vs PAK

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி தொடக்கத்தில் தடுமாறினால் இறுதியில் அதிரடி காட்டியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதேபோல் இஃப்தார் அகமது 51 ரன்கள் எடுத்தார்.