இங்கிலாந்து பவுலர்கள் மிரட்டல் - 137 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

 
eng vs pak

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் சேர்த்துள்ளது. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களி பிடித்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

eng

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர்.