சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - இறுதி போட்டியில் பிவி சிந்து

 
PV Sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை சாயினா கவாகாமியை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார்.  வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேனுடன் மோதிய பிவி சிந்து 19-21, 21-19, 21-18. என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து  காலிறுதி சுற்றில்  சீனாவின் ஹான் யூவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார். பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில், அதில் ஜப்பான் வீராங்கனை சாயினா கவாகாமியுடன் பிவி சிந்து மோதினார். இந்த போட்டியில் 21க்கு 15 , 21க்கு 7 என்ற செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.