ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

 
PV Sindhu


ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.  இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.  நேற்று நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

pv Sindhu

இந்நிலையில் இன்று  நடந்த காலிறுதி போட்டியில் பிவி சிந்து , சீனாவை  சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை  எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-9 கணக்கில் பி.வி ,சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்து இரண்டாவது செட்டை 13-21 என்ற கணக்கில் ஹி பிங் ஜியாவோ கைப்பற்றினார் . இதை தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான 3 வது செட்டில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார் .இதன்மூலம் 21-9 ,13-21,21-19 என்ற செட் கணக்கில் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி  பி.வி.சிந்து  வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.