இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சு

 
INDvsNZ toss

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டது.  இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


இந்திய அணி விவரம் : இஷான் கிஷன், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.