இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்

 
toss

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
  
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நேபியரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டிம் சவுதி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி விவரம் : இஷான் கிஷன், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து அணி விவரம் : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி(கேப்டன்), லாக்கி பெர்குசன் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.