டி20 உலக கோப்பை - இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்

 
NZ

டி20 உலக கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், சிட்னியில் இன்று நடக்கும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

NZ vs SRI


 
நியூசிலாந்து அணி விவரம் : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை அணி விவரம் : பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித உள்ளிட்டோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.