அரையிறுதி போட்டி - டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

 
NZ

டி20 உலக கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின.  இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்ட நிலையில்,  டாஸ் வென்ற  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

pak

நியூசிலாந்து அணி விவரம் : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். 

பாகிஸ்தான் அணி விவரம் : முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்டோர் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.