டி20 உலக கோப்பை - அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த நியூசிலாந்து

 
nz

டி20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றது.  

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்தார்.  கடைசி நேரத்தில், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.  

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 37 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.