டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து - இந்திய அணி பேட்டிங்

 
ind vs nz

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. 

இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்) ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து  : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(கேட்பன்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.