இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு - மிட்செல் சாண்ட்னர் கேப்டன்

 
nz

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவதாக விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 

இலங்கை தொடர் முடிந்ததும் அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டி20 அணி : மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பின் ஆலென், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளிவர், கான்வே, ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்போன், ஹென்றி ஷிப்லி, சோதி, பிளேர் டிக்னெர் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.