டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் - நீரஜ் சோப்ரா சாதனை

 
Neeraj Chopra

டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.  

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரரான  நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தினார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.  டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.