சென்னையில் நம்ம தல தோனி....திடீர் வருகை எதனால் தெரியுமா?

 
dhoni

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 75 வது ஆண்டு விழாவில் கொண்டாடி வருகின்றனர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமித்ஷாவும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு தமிழகம் வந்தடைந்தார். இதனையடுத்து இன்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

amit shah


இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனி கலந்துகொண்டார். அவர் அமர்ந்த இருக்கைக்கு அருகாமையிலேயே தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். இவர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் வருகை தந்து இருந்தனர்.