சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது - கபில் தேவ் புகழாரம்

 
Kapil dev

இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி வீரர்கள் கிடைப்பது அரிது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். 
 
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த 07ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில்,  இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 

Suryakumar Yadav having no limit in T20I

சூர்யகுமார் யாதவ் குறித்து கபில்தேவ் கூறியதாவது: சூர்யகுமார் யாதவின் இன்னிங்சை விவரிக்க சில சமயம் வார்த்தைகளே கிடைக்காது. சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாடும் விதம் அற்புதம். குறிப்பாக 'பைன் லெக்' திசைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள் பந்து வீச்சாளர்களை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே 'மிட் ஆன்' மற்றும் 'மிட் விக்கெட்' திசையிலும் சிக்சர்கள் விரட்ட முடிகிறது. பந்து வீச்சாளர்கள் சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து வீசினாலும் அதையும் தெறிக்க விடுகிறார். அதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம். ஒரு சிலரே சூர்யகுமார் போன்று பந்தை துல்லியமாக நொறுக்குகிறார்கள். அவருக்கு பாராட்டுகள். அவரை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என தெரிவித்தார்

.