கேன் வில்லியம்சன், மயன்க் அகர்வால், பூரன், பிராவோ ஆகிய முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஐபிஎல் அணிகள்

 
ஐபிஎல் அணிகள்

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.

ipl

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15 ஆன இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.அதன் படி‌ ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை அணியை பொறுத்தவரை டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த்,பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா ஆகியோரை விடுவித்துள்ளது. மற்ற அணிகளில் கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், மயாங் அகர்வால்,,அலெக்ஸ் ஹாலஸ்,பேட் கம்மிங், சாம் பில்லிங்ஸ், ஜெமி நீசம்,ஜேசன் ஹோல்டர்,லிவீஸ், டேனியல் சாம்ஸ் போன்ற வீரர்கள் தங்களது அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.