நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட்

 
ire

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்தார். 

கடைசி நேரத்தில், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் இது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோசுவா லிட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.