பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி-கோலியின் அரைசதத்தால் இந்திய அணி 181 ரன்கள் குவிப்பு

 
Ind

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 பிரிவு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. காசு என்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

indvspak

இந்திய அணியின் துவக்காட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். தொடர்ந்து சொதப்பி வந்த இந்த ஜோடி முறை அதிரடி துவக்கம் தந்தது.ரோகித் சர்மா 16 பந்துகளில் 28 ரன்களும்,கேஎல் ராகுல் 20 பந்துகளில் 28 ரன்களும் அடித்து அதிரடி துவக்கம் தந்தனர். ஒருபுறம் விராட் கோலி சிறப்பாக ஆட மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சிறப்பாக ஆடிய கோலி 36 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.இது விராட் கோலியின் 32வது டி20 அரை சதமாகும். சர்வதேச டி20 களில்  அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி  படைத்துள்ளார்.சிறப்பாக ஆடிய கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 சேர்த்தது.
 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது