இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி - இந்திய அணி அபார வெற்றி..

 
 இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி -  இந்திய அணி அபார வெற்றி..

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.   

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று  பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும்  சுப்மன் கில் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக ஆரம்பித்த இவர்களது பார்ட்னர்ஷிப்பானது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  ரோஹித் சர்மா  42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16 வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  இருந்தபோதிலும் களத்தில் இருந்த  சுப்மன் கில் சதம் அடித்து விலாசினார்.  மொத்தமாக அவர் 116 ரன்கள் எடுத்திருந்தார்.

 இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி -  இந்திய அணி அபார வெற்றி..

அவரையடுத்து இணைந்த  விராட் கோலி  அதிரடியான ஆட்டத்த வெளிப்படுத்தி, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  50 ஓவர் முடிவில்  இந்திய அணி  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்திருந்தது. இப்போது இலங்கை அணியை வெல்வதன் மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருந்தனர். 391 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக ஆடிய இலங்கை அணி,  22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஓருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.