காமன்வெல்த் - மகளிர் ஹாக்கியில் இந்திய அணி கானா அணியுடன் மோதல்

 
common wealth hockey

காமன்வெல்த் போட்டியில், இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் கானா அணியுடன் மோதுகிறது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நேற்றிரவு தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா, மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் -கானா அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று,  வெற்றியுடன் காமன்வெல்த் போட்டியை தொடங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.