காமன்வெல்த் ஸ்குவாஷ் - முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் வெற்றி

 
Anahat Squash

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் வெற்றி பெற்றார். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  28ம் தேதி  முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன

இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங்,செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர் . இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.