இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்

 
indian players

இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

indian players

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவதாக விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

indian players

இதனையொட்டி இந்திய அணி திருவனந்தபுரம் சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யூஸ்வேந்திர சஹால், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.